Iranaimadu Sri Kanakampikai Ambal Temple Annual Festival 2026 – இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Iranaimadu Sri Kanakampikai Ambal Temple Annual Festival 2026
இரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழமையாகும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பூரணை தினமான சித்திரா பௌர்ணமி தினத்தை பத்தாவது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்டமைந்த பதினொரு நாட்களாகும்.
இரணைமடுக் குளக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலின் கோடியேற்ற திருவிழா, வேட்டை திருவிழாவும் அன்றிரவு சப்பரமும், தேரும், தீர்த்தமும், பூங்கவனமும் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறும். ஒவ்வொரு திருவிழாவையும் கிளிநொச்சியின் ஒவ்வொரு குறிச்சி மக்களும் இணைந்து கொண்டாடுவது சிறப்பானதாகும்.
கொடியேற்றம் 22.04.2026 புதன்கிழமை
தேர் 30.04.2026 வியாழக்கிழமை
தீர்த்தம் 01.05.2026 வெள்ளிக்கிழமை
