Chunnakam Sri Kathiramalai Sivan Temple Annual Festival 2026 | சுன்னாகம் கதிரமலைச் சிவன் வருடாந்த மகோற்சவம் 2026
Chunnakam Sri Kathiramalai Sivan Temple Annual Festival 2026 | சுன்னாகம் கதிரமலைச் சிவன் வருடாந்த மகோற்சவம் 2026
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சைவத் திருத்தலமாகும். இக்கோயில் தமிழ் மன்னன் உக்கிர சிங்கனால் நிறுவப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இது “கதிரமலை” என அழைக்கப்படும் பகுதியில், கதிரமலை சிவன் தேவஸ்தானம் எனும் பெயரில் கல் சிற்பங்களுடன் கூடிய காலத்தால் அழியாத கம்பீரமான ஆலயமாக காணப்படுகிறது.
வருடாந்த மகோற்சவம் 04.05.2026 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
15.05.2026 வெள்ளிக்கிழமை இரதோற்சவம் இடம்பெறும்.
16.05.2026 சனிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடையும்.
