59 ஆவது சைவப்புலவர் பட்டமளிப்பு விழாவும் சைவ மாநாடும் – Saiva pulavar graduation & conference 2020
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமுன்னிலையில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் முற்பகல் 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீ பீடாதிபதி கலாநிதி திருமதி சுகந்தினி சிறிமுரளிதரன் சிறப்பு விருந்தினர்களாக சிவஸ்ரீ ஆ.சந்திரசேகரக்குருக்கள் , பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் , யாழ்ப்பாணப் பல்ககைலக்கழ இந்துநாகரீகத்துறைத் தலைவர் ச.முகுந்தன் கௌரவ விருந்தினராக கொடிகாமம் வர்த்தக சங்கத் தலைவர் சு.அருணாசலம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
வரவேற்புரையினை சைவப்புலவர் ஆனந்தி ஜெயரட்ணம் ஆசியுரையினை சிவஸ்ரீஆ.சந்திரசேகரக்கருக்கள் நல்லை அதீனம் சுவாமிகள் மாநாட்டு சிறப்புரையினை இந்து நாகரீகத்துறைத் தலைவர் ச.முகுந்தன் ஆகியோர் வழங்கவுள்ளார்கள்.
சைவப்புலவர் சங்கப் பொருளார் சைவப்புலவர் ச.முகுந்தன் தலைமையில் நடைபெறும் கௌரவிப்பு நிகழ்வில் சைவாகமபூஷணம் பட்டத்தினை சிவஸ்ரீ ஆ.சந்திரசேகரக்குருக்கள் , பண்டிதர் தி.பொண்ணம்பலவாணர் சைவப்புரவலர் பட்டத்தினை சு.அருணாசலம் ஆகியோர் பெற்றுக் கொள்ளவுள்ளார்கள்.
2019 அம் ஆண்டு தேர்வில் சித்தி பெற்ற சைவப்புலவர்கள் இளைஞ்சைவப்புலவர்கள் பட்டமளிப்பு சைவப்புலவர் சங்க தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் ஏ.அனுசாந்தன் நெறிப்படுத்தலில் இடம்பெறவுள்ளது.
சைவநாதம் 9 மலர் இற்கான வெளியிட்டு உரையினை சைவப்புலவர் சங்க உபதேர்வுச் செயலாளர் சைவப்புலவர் சி.க.கமலநாதன் நயப்புரையினை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஸ்ட விரிவுரையாளர் மு.கௌரிகாந்தன் ஆகியோர் வழங்குவார்கள் முதற்பிரதியினை கொடிகாமம் வர்த்தக சங்கத் தலைவர் சு.அருணாசலம் பெற்றுக்கொள்வார்.
கலை நிகழ்வுகளாக வட்டு இந்துக் கல்லூரி மாணவிகள் செல்வி க.கோகுலவதனி யோ.கஜாந்தினி ஆகியோரின் புராணபடணம் நிகழ்வு வட்டு இந்துக்கல்லூரி மாணவி செல்வி தி.பானுப்பிரியாவின் கதாப்பிரசங்கம் நிகழ்வு வட்டு இந்துக்கல்லூரி மாணவன் செ.பிரசாந்தனின் சிவநடனம் நிகழ்வு ஆகியன இடம்பெறவுள்ளது. நன்றியுரையினை சங்கச் செயலாளர் சைவப்புலவர் த.குமரன் வழங்குவார்.