Urumpirai Karpaha Pillaiyar Temple Annual Festival 2026 – உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
Urumpirai Karpaha Pillaiyar Temple Annual Festival 2026 – உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026
உரும்பிராயில் ஓடையம்பதி என்று அழைக்கப்படும் குறிச்சியில் இக் கோயில் அமைந்துள்ளதால் ஓடையம்பதி கற்பகப் பிள்ளையார் கோயில் என்ற பெயராலும் இக்கோயில் அறியப்படுவது உண்டு. யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ நான்கு மைல்கள் தொலைவில் பலாலி வீதியோரமாக இக்கோயில் அமைந்துள்ளது.
ஆனிப் பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு 15 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறும். 10 ஆம் நாள் மஞ்சத் திருவிழாவும், 11 ஆம் நாள் கைலாச வாகனத் திருவிழாவும், 13 ஆம் நாள் சப்பறத் திருவிழாவும், 14 ஆம் நாள் தேர்த் திருவிழாவும் இடம்பெறும். 15 ஆம் நாள் தீர்த்தத் திருவிழா. அடுத்த நாள் பூங்காவனத் திருவிழா நடைபெறும்.
கொடியேற்றம் – 15.06.2026 – திங்கட்கிழமை
தேர் – 28.06.2026 ஞாயிற்றுக் கிழமை
தீர்த்தம் – 29.06.2026 திங்கட் கிழமை
